பிரேசிலில் 12 வயது சிறுமியை நபரொருவர் கடத்திச் சென்ற வழக்கில், அவருக்கு ஒரு இளம்பெண் உதவியது தெரியவந்துள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள பிரேசிலியா என்னுமிடத்தில், சந்தேகத்துக்குரிய வகையில் சூட்கேஸ் ஒன்றை இழுத்துச் சென்ற டேனியல் (Daniel Moraes Bittar, 42) என்னும் நபர், பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராக்களில் சிக்கினார்.
குறிப்பாக டேனியலும், Gesielly Souza Vieira (23) என்னும் ஒரு இளம்பெண்ணும், Luziania என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலையின் அருகே நடமாடியதும் தெரியவந்துள்ளது.
பாடசாலையில் பயின்று வரும் சில பிள்ளைகள், Gesielly, ஒரு சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து தெளிக்கப்பட்ட கைக்குட்டையை அழுத்தி, அவளைக் கடத்திச் சென்றதைப் பார்த்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்கள்.
இரவு 11.30 மணியளவில் டேனியல் வீட்டை அடைந்த பொலிஸார், அங்கு ஒரு சிறுமி கட்டிலில் படுத்திருப்பதையும், அவளது கால்களில் கைவிலங்கிடப்பட்டிருப்பதையும் கண்டுள்ளார்கள்.
அங்கேயே இருந்த டேனியலைக் கையும் களவுமாக பிடித்த பொலிஸார், அந்த சிறுமியை மீட்டுள்ளார்கள்.
மேலும், அவரது வீட்டை பொலிஸார் சோதனையிடும்போது, அந்த வீட்டில் கமராக்கள், ஸ்டென் கன் என்னும் தாக்கும் கருவி, ஆபாச வீடியோக்கள் மற்றும் ஒரு போத்தல் குளோரோஃபார்ம் என்னும் மயக்கமருந்தும் இருந்துள்ளன.
பொலிஸார் டேனியலிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.