கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது கல் ஒன்று அகற்றப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் ஏ. டபிள்யூ. எம். சமீம் தலைமையில் நடைபெற்ற சத்திரசிகிச்சையின் போதே இந்த விசித்திரமான கல் சிறுநீரகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன் , அர்ப்பணிப்புடன் சேவை வழங்கிய ஏனைய வைத்தியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் சத்திர சிகிச்சை நிபுணர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.