மத்திய மலைநாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உப பிரதேச செயலகமொன்றில் சிபாரிசு கடிதம் பெறுவதற்காக சென்ற பெண்ணொருவருக்கு கடித்தம் வழங்க அதிகாரி ஒருவர் பத்தாயிரம் ரூபா லஞ்சம் கேட்டதாக கூறப்படுகின்றது.
கடந்த ஒரு மாதங்களாக குறித்த கடிதத்தை வழங்காது இழுத்தடிப்பு செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்,
குடும்பத்தில் பாரிய பொருளாதார பிரச்சினை. எனக்கு மூன்று பிள்ளைகள். தோட்டத்தில் போதிய வருமானம் இல்லாமல் வெளிநாடு செல்லவுள்ளேன். எனது குடும்ப வறுமையை ஈடுசெய்யும் நோக்கில் முகவர் ஒருவர் மூலம் வெளிநாடு செல்ல சகல ஏற்பாடுகளும் செய்து முடித்துள்ளேன்.
இதற்காக இறுதியில் பிரதேச செயலகத்தின் சிபாரிசு கடிதம் பெற வேண்டிய நிலையில் கடந்த மாதம் முதல் அலைந்து வருகிறேன் . அங்குள்ள அதிகாரி ஒருவர் பத்தாயிரம் ரூபாய் கேட்டு கடந்த ஒரு மாதமாக என்னை இழுத்தடிப்பு செய்து வருகிறார்.
இதனால் எனக்கு வெளிநாடு செல்ல முடியாதுள்ளதாக தெரிவித்த பென், இந்த செயலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிக்க வேண்டும் என முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.