சூர்ய மங்கள்ய புத்தாண்டு பாடலை கேலி, கிண்டல் செய்யும் வகையில் பாடிய மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாடகர் ரோஹன பெத்தகேவின் “சூர்ய மங்கல்ய” என்ற பாடலே இவ்வாறு திரிபுபடுத்தி பாடப்பட்டுள்ளது.
திரிபுபடுத்தப்பட்ட பாடல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடாபில் வடமேல் மாகாண கணனி குற்றப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் வாரியபொல தலாதுஓய பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் மதுவரித் திணைக்களத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் இன்று குளியாப்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.