சிங்கன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் யெர்மெனி ஆரம்பிக்கும் போதும் மாவீரன் பிரபாகரன்
17.10.2021 இன்று வருடாந்த பொதுக்கூட்ம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆரம்பநிகழ்வாக
தாயகத்தில் இலங்கை இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் மாவீரர்களுக்கும்
ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து செயலாளர் அறிக்கை,ஆலைய குருக்கள் நல்லாசி உரை,தலைவர் உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாப்பில் சில மாற்றங்கள் செய்வது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு யாப்பில் மாற்றங்கள் இடம் பெற்றது.
அடுத்து பொருளாளர் அவர்களால் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டது.
புதிதாக கோயில் கட்டி முடிக்க முழுமையாக 763.000,00 யூரோ முடிவுற்றதாகவும் அறிவிக்கப்பட்டது இந்தவிடையம் போற்றுதலுக்கு உரியது. இந்த தொகையில் இந்த கோவிலைக் கட்டி முடித்து இருக்க முடியாது காரணம் பல வேலைகளை மக்கள் தானாக முன்வந்து செய்ததால் இந்த தொகையில் கட்டிமுடிக்கப்பட்டது இந்த விடையம் போற்றுதலுக்குரியது.
அத்துடன் 255931.07 யூரோ தற்சமயம் வங்கியில் கடன் உள்ளது என்று அறிவிக்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து கோயில்கட்டிய காலப்பகுதியில் நிதி ஆய்வில் இருந்தவர்களால் கணக்கறிக்கை நேர்த்தியாக இருப்பதாக அறிக்கை வாசிக்கப்பட்டது.
அத்துடன் இளையவர்களையும் கோயில் நிர்வாகத்திற்குள் இணைத்து எமது கலை கலாச்சாரங்களை பேணிக்காக்கும் நோக்கத்துடன் இளையவர்களை இணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது!!!!!!!!!!!
அதில் முக்கியமாக சிங்கன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் 20 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கும் போது மாவீரன் பிரபாகரன் அவர்களின் திரு உருவப்படம் அர்சனை சிட்டை கொடுக்கும் இடத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படம் புதிய கோவிலில் ஏன் வைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் பல விதமாக அமைந்தது. தற்சமயம் அவர் கடவுளை விட புனிதமானவர் என்றும் அவர் எல்லோருடைய மனதிலும் இருப்பதால் கோயிலில் வைக்கத் தேவையில்லை என்றும் மேலும் சட்டப் பிரச்சனை என்று சாட்டுப் போக்குகளை கூறி கோயிலில் மாவீரன் பிரபாகரன் புகைப்படம் வைக்கப்படக்கூடாது என்று பூசகர் உட்பட நிர்வாகம் தீர்மானித்தது!
இப்படியே போனால் மாவீரன் பிரபாகரன்
என்பவர் யார் என்று கேட்கும் நிலை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்று பலர் ஆதங்கப்பட்டார்கள். கோயில் ஆரம்பிக்கும் போது தலைவர் அவர்களின் புகைப்படம் தேவைப்பட்டது. தற்சமயம் கோயில் வளர்ச்சி பெற்றவுடன் மாவீரன் பிரபாகரன் அவர்களின் புகைப்படம் மறைக்கப்பட்டது ஏன்? எமது வரலாறுகள் விலை போவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இன்று புலத்தில் திட்டமிட்டு எமது வரலாறுகளையும் வரலாற்று நாயகர்களையும் ஒழிப்பதற்காக கங்கணம் கட்டி நிற்கின்றனர் பலர் மக்களே விளித்துக்கொள்ளுங்கள்.
*கரிகாலன் *