கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் செல்லும் வயோதிபர் மற்றும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களின் உடமைகள் கொள்ளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிகிறைசைக்கு செல்பவர்களிடம் பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்பு
இவ்வாறு அபகரிக்கப்பட்ட சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் வெலிகம பிரதேசத்தில் தங்கம் கொள்வனவு செய்யும் இடமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிகிச்சைக்குச் சென்ற பெண் ஒருவரிடம், நட்பு பாராட்டி, அவரை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்று உணவு மற்றும் பானங்களில் போதைப்பொருளைக் கலந்து கொடுத்த பின்னர் அவர்களிடமிருந்த தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோதே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கைதானவர்கள் இருவரும் பொலிஸாரால் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.