குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி அவர்களுக்கு ‘செக்ஸ் கியூர்’ செய்வதாக இத்தாலியில் வைத்தியர் ஒருவர் சிக்கினார். இதனையடுத்து அவர் தன் வேலையை ராஜினாமா செய்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இத்தாலிய மகப்பேறு மருத்துவர் கியோவானி மினியெல்லோ (60 வயது) இவரை மேஜிக் ஃபுளூட் என்று செல்லமாக அழைப்பார்களாம். குழந்தை பாக்கியம் இல்லை என்று வந்த பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ‘செக்ஸ் வைத்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’ என்று கூறி அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார்.
புலன் விசாரணை நடத்திய தொலைக்காட்சி ஒன்று தன் பெண் பத்திரிகையாளரை ‘அண்டர் கவர்’ ஆபரேஷனாக அந்த டாக்டர் கியோவானி மினியெல்லோவிடம் அனுப்பியது. அதாவது இந்தத் தொலைகாட்சியில் பெண் ஒருவர் இந்த மருத்துவரின் செக்ஸ் திருவிளையாடல்களையும் சீண்டல்களையும் கூறி அழ, இந்தத் தொலைக்காட்சி புலன் விசாரணையைத் தொடங்கியது.
அதாவது இந்தப் பெண்ணிடம், ‘சிறு மார்பகங்கள் உடைய பெண்களின் ரசிகன் நான்” என்று கூறிக்கொண்டே அந்த பெண் மீது கையை வைத்துள்ளார், இது இப்போது அம்பலமாக அவர் தன் வேலையை ராஜினாமா செய்தார். உண்மையில் அந்தப் பெண் தனக்கு குழந்தைப் பேறு இல்லை என்று வந்துள்ளார் அவரிடம் டாக்டர் கியோவானி, ஹியுமன் பாபிலோனா வைரஸ், அதாவது பாலியல் ரீதியாக தொற்றிய டிஎன்ஏ வைரஸ் என்று கூறி அந்தப் பெண்ணை பயமுறுத்தியுள்ளார், பிற்பாடு பரிசோதனையில் அப்படி எதுவும் இல்லை என்ற உண்மை தெரிந்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக அவரை பயமுறுத்திய டாக்டர் கியோவானி, குழந்தை பிரச்சனைக்குத் தீர்வு தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதுதான் என்று கூறியுள்ளார். இந்தப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட சட்ட ஆலோசனை செய்துள்ளார். பிறகு டாக்டருடனான உரையாடல் அனைத்தையும் ரெக்கார்ட் செய்து பிறகு தொலைக்காட்சிக்குக் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தொலைக்காட்சி இதை அம்பலபடுத்த ரகசிய நடவடிக்கையாக தொலைக்காட்சிக்காக நடிக்கும் நடிகையை அனுப்பி அந்தப் பெண் கூறியது போல் குழந்தை இல்லை, சிகிச்சை தேவை என்று கூறியுள்ளார், டாக்டர் கியோவானியும் உடனே அதே செக்ஸ் ‘சிகிச்சை’யை பரிந்துரை செய்தார். ஹோட்டல் அறைக்கு அழைத்ததோடு, தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் ஏனெனில் தான் 2 டோஸ் வாக்சின் போட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிறகு தன் உடைகளைக் களைந்துள்ளார் டாக்டர். அப்போது தொலைக்காட்சி நிருபர் உள்ளே புகுந்து அரைநிர்வாண 60 வயது டாக்டரை கையும் களவுமாகப் பிடித்துள்ளார். கையும் களவுமாகப் பிடிப்பட்டும், “நான் ஆய்வுக்காக இதைச் செய்கிறேன். பிறரையும் நான் இப்படிக் காப்பாற்றியிருக்கிறேன்” என்றாரே பார்க்கலாம். இதில் சிக்கிய பிறகு சுமார் 15 பெண்களிடம் இவர் தன் கைவரிசையைக் காட்டியதும் அம்பலமாகியுள்ளது.