பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் Pan இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது சலார். கடந்த வாரம் தான் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
உலகளவில் இதுவரை 150 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை பெற்று Youtube-ல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து பிரித்விராஜ், சிரேயா ரெட்டி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வருகிற டிசம்பர் 22ஆம் தேதி உலகளவில் வெளிவரவுள்ள இப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை முழுமையாக சலார் பூர்த்தி செய்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில், சலார் படம் குறித்து அனைவரும் ஷாக் கொடுக்கும் அளவில் செம சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது. சலார் படத்தின் தெலுங்கு திரையரங்க உரிமை மட்டுமே ரூ. 182 கோடி வரை விற்பனை ஆகியுள்ளதாம்.
தெலுங்கில் மட்டுமே ரூ. 182 கோடி வரை திரையரங்க உரிமை விற்பனை ஆகியுள்ள நிலையில் இதுமிகப்பெரிய சாதனை என தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.