இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிகளுக்கும் QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலானி டி சில்வா தெரிவித்தார்.
தற்போது இலங்கையர்களிடம் நான்கு வகையான சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளன, அவை அனைத்தும் மீண்டும் புதுப்பிக்கப்படும் போது, அவர்களுக்கு QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.