கொட்டாவ – மாட்டாகொட வீதியில், பயணித்துக்கொண்டிருந்த வான் சாரதி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் செலுத்திய வான் பல வாகனங்களுடன் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, பிராடோ ஜீப், வான் மற்றும் லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய சாரதியே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சாரதி தனது அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு மாட்டாகொடைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டாலும், ஏனைய சாரதிகள் காயமின்றி தப்பியுள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.