சவுதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் மீண்டும் தாக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும், சிறைச்சாலைக்குள் அவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோரிக்கைகள்
எனவே சவுதி அரேபிய சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, அனோஜனின் உயிருக்கும் உடல் பாதுகாப்பிற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதுடன், இந்தத் தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணையும் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் ஒரு பாரதூரமான சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அனோஜனின் சகோதரருக்கு அழைப்பினை ஏற்படுத்திய போது அவரும் இது தொடர்பில் எம்மிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

