இலங்கையில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருவதால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலகக்கோரி கடந்த மூன்று மாதங்களாக மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த மாதம் 9 ஆம் திகதி அரசாங்கத்தில் பிரதமர், உட்பட பல அமைச்சர் மக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கோரி கடந்த 9ம் திகதி மக்கள் மீண்டும் ஒரு பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் பிரதிபலிப்பாக கோட்டாபய நேற்று முன்தினம் (13-07-2022) பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மாலைத்தீவு தப்பி சென்றார். அந்நாட்டு மக்கள் கோட்டாபயவை எதிர்த்ததால் அவர் சிங்கப்பூருக்கு தப்பியோடியுள்ளார்.
இவ்வாறான ஒரு நிலையில்,
எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கும் கோட்டாபயவுக்கு, உகண்டா சர்வாதிகாரி இடி அமீன், துணிசியா நாட்டின் சர்வாதிகாரி பென் அலி, போன்றோருக்கு அரசியல் தஞ்சம் வழங்கிய சவுதி அரேபியா, கருணை காட்டுமா என முகநூலில் Nithyanandarajah Prashanthan என்னும் இலங்கை தொழிலதிபர் ஒருவர் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார்.