சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நேற்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ சபையினால் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளைக் கொண்ட தேசிய சபையை நியமித்த பின்னர் ஒப்பந்தம் குறித்த கொள்கையை தேசிய சபைக்கு முன்வைக்க எதிர்பாரத்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.