சர்வதேச t20 போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க கைப்பற்றியுள்ளார்.
ஆப்காஸ்தானுக்கு எதிராக இன்றையதினம் இடம்பெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நஜிபுல்லா சத்ரனின் விக்கெட்டை வீழ்த்தியதன் ஊடாக அவர் தனது 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
இதன்படி, அதிவேகமாக 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் இரண்டாம் இடத்தை வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார்.
இவர் 63 போட்டிகளில் கலந்து கொண்டு இந்த விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.