ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக தெரிவித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.
இதன்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ஒரே நாளில் 2.94 டொலர்கள் (3.63%) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.72 டொலர்களாக தற்போது பதிவாகியுள்ளது.
அமெரிக்க டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 2.07 (2.67%)டொலரால் அதிகரித்ததை அடுத்து தற்போது ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 79.56 டொலர்களாக பதிவாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு விடையளிக்கும் வகையில், மேற்கத்திய நாடுகளின் G-7 குழு ரஷ்ய கச்சா எண்ணெய் மீது 60 டொலர் அதிகரித்து உச்சவரம்பை விதித்தது.
மற்றும் அதற்கு பதிலடியாக ரஷ்யா தனது தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 500,000 முதல் 700,000 பீப்பாய்கள் வரை குறைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியது.