ராஜபக்ஷர்கள், தேர்தலுக்கு எப்போதுமே பயந்தவர்கள் இல்லை என்றும், , ஆகையால் நீங்களும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சியினருக்கு ஆளும் தரப்பு அறிவுரை கூறியது.
அத்துடன் , எப்போது தேர்தல் வேண்டும் எனவும் ஆளும்தரப்பினரால் , நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ புள்ளே இதனை தெரிவித்தார்.
இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹோரண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் தேர்தலுக்கு பயந்தவர்கள் அல்லர், ராஜபக்ஷர்களும் பயப்பிடமாட்டார்கள், தேர்தல் எப்போது வேண்டும். தேர்தல் நடக்கவேண்டிய நேரத்தில் தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த ஜோன்ஸ்டன், அதில் மொட்டு விஷேட வெற்றியை பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.