பதுளை – மட்டக்களப்பு பிரதான வீதியின் லுணுகல – அரவகும்புர பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மண்மேடு இன்று (2024.01.06) காலை வீழ்ந்துள்ளதுடன், நேற்று காலை அதே இடத்திற்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மண்மேட்டை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த போதிலும் இன்று காலை மீண்டும் இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.