தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என கனடாவின் பிராந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படுகின்றதாகவும் இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் செயற்படுகின்றனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறினார்.
இந்நிலையில் எதற்காக இப்படியான சட்டம் இயற்றப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
தமிழர்கள் சித்திரவதை திரைப்படம்
தமிழர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர், இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என திரைப்படம் தயாரிக்கப்படும்போது, கதைப் புத்தகங்கள் எழுதப்படும்போது சர்வதேச விருது கிடைக்கின்றது.
இது ஏன் என்பதும் இப்போது புரிகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரிவினைவாதிகளுக்கு பலவீனமானதொரு மத்திய அரசே வேண்டும், அதற்காகவே 13, 16 மற்றும் 11 ஆவது திருத்தச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாகவும் அதுவே நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.