கிளிநொச்சியில் 14 வயதான சிறுமியொருவர் காதலனால் போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெர்யவருகின்றது.
அதுமடுமல்லாது காதலனால் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, காதலனின் நண்பர்களாலும் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சிறுமியின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாயமான காதலன்
இந்த நிலையில், ஹெரோயினுக்கு அடிமையான 17 வயதான சிறுவன் ஒருவன், 14 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் சிறுவன் சொன்ன யோசனையின் அடிப்படையில் இருவரும் சில வாரங்களின் முன்னர் வீட்டிலிருந்து 5 பவுண் நகையுடன் சிறுமி தலைமறைகியுள்ளனர்.
சிறுமியை அழைத்துக் கொண்டு கொழும்புக்கு சென்ற காதலன் அங்கு நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார். இதன்போது காதலனாலும், 3 நண்பர்களாலும் சிறுமி வன்புணரப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் சிறுமியை சொந்த ஊருக்கு அழைத்து வந்து, வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகின்றது