பெண்களுக்கு அலைபேசி அழைப்பு மேற்கொண்டு ஏமாற்றி பணம் மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த 8ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பெண்களுக்கு அலைபேசி அழைப்பு
சந்தேகநபர் பெண்களுக்கு அலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், ஆபாசமான தகவல் மற்றும் காணொளிகளை அனுப்பியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் மாத்தறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியக அதிகாரிகள் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரின் அலைபேசி மற்றும் வங்கிப் பதிவுகள் தொடர்பான தகவலின் ஊடாக சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பல பெண்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன