அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சாரதி கம்பஹா பொது வைத்தியசாலையின் யாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அம்பியூலன்ஸ் சாரதி நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீதுவ ரத்தொலுகம கொடுகுடா பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சமபவ்ம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.