பல்கலைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள், சஹரானைப் போல தாடி மற்றும் தலைமுடி வளர்ப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே இவ்வகையான மாணவர்களை 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என மிஹிந்தல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாகஹங்குனவவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
புத்தரின் தர்ம சிந்தனை
புத்தரின் தர்ம சிந்தனைகளைப் பின்பற்றாமல் தலிபான்கள் லெனின் கோட்பாட்டை பின்பற்றுவதுபோல அவர்கள் பின்பற்றுகின்றதாகவும் அவர் கூறினார்.
விசேட மற்றும் பொது பட்டம் பெறும் இரு வகையான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதாக தெரிவித்த தேரர், அவர்களை 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
சஹரான் என்ற நபர் தாடியுடன் இறந்ததாகவும் அதன் பின்னர் பலர் சஹாரானைப் போல தாடி வளர்க்க ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள் மற்றும் பௌத்த துறவிகள், தலைமுடி மற்றும் தாடியை வளர்க்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் பௌத்த பாலி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பயிலும் கலைப் பீட பிக்கு மாணவர்கள் தாலிபான்கள் போன்று செயற்படுகின்றதாகவும் வலவாகஹங்குனவவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.