நீர்கொழும்பு, குரணை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு, நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நால்வர் கைது
இதன்போது மசாஜ் நிலைய முகாமையாளரான பெண் மற்றும் அங்கு தங்கியிருந்த மேலும் மூன்று பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட பலாங்கொடை, தெஹியத்தகண்டிய மற்றும் தொடுவா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் கைதான சந்தேக நபர்கள் இன்று (செப். 21) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.