சமூக ஊடங்களில் இருந்து சிறிது காலத்திற்கு தாம் விலகுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (20) புதன்கிழமை முகநூல் பக்கத்தில் பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை (16) தன் இடது கண்ணில் செய்துகொண்ட சத்திரசிகிச்சை காரணமாக டிஜிட்டல் திரையைப் பார்வையிடுவதில் இருந்து தவிர்ந்து கொண்டுள்ள வேண்டுமென மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் நான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இதன் காரணமாக பதிவுகளுக்கு பதிலளிக்க முடியாதுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
தன் கண்ணில் மேற்கொண்டுள்ள சத்திரசிகிச்சையின் பின்னர் மீண்டும் ஒக்டோபர் 31 ஆம் திகதியே மருத்துவர் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் மேலும் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.