2020/2021 வருட மாணவர்களைத் தவிர சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைகுறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2020/2021 வருட மாணவர்கள் தவிர்ந்த வசிப்பிட வசதி செய்துள்ள அனைத்து பீடங்களின் மாணவர்களும் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020/2021 வருட மாணவர்கள் தவிர்ந்த அனைத்து பீடங்களின் மாணவர்கள் இன்று (16) மாலை 4 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தாக்கியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.