சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மூன்றாவது கச்சா எண்ணெய் கப்பலில் இருப்புக்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் மத்திய வங்கியினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வாராந்தம் வழங்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, கடந்த காலங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை வழங்கிய விதத்தில் அவ்வாறே தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.