சனல் 4 இன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆவணப்படத்தை ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்விற்கு முந்தைய நாடகமாக அரசாங்கம் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சனல் 4 இன் வெளியிட்ட வீடியோ குறித்து நிதானமான விதத்தில் பதிலை வெளியிடவேண்டும் எனவும் அரசாங்கம் கருதுகின்றது.
சனல்4 இன் ஆவணப்படம் ஜெனீவா அமர்வு இடம்பெறும் நேரத்தை மையப்படுத்தி வெளியாகியுள்ளதால் அரசாங்கம் அவசரப்பட்டு நடவடிக்கைகள் எதனையும் எடுக்ககூடாது என அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
எனினும் சனல் 4 குற்றம்சாட்டியவர்கள் மாத்திரம் அதற்கான பதில்களை வழங்கவேண்டும் அரசாங்கம் வழங்கதேவையில்லை என ஜனாதிபதி கூறியதாகவும் குறிப்பிடப்பட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்கவேண்டும் என, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றதாக தெரிக்கபப்டும் நிலையில் ,எனினும் இது குறித்த வேண்டுகோள்கள் தனக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.