நத்தார் மற்றும் புத்தாண்டு காலப் பகுதியில் கேக் தயாரிப்பதற்கு போதியளவு முட்டைகள் கிடைக்காத காரணத்தால் உள்நாட்டு சந்தையில் கேக் விற்பனை 25 வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறைந்தது 50 வீத கேக் விற்பனையை தாங்கள் எதிர்பார்த்திருந்த போதிலும், முட்டை பற்றாக்குறை காரணமாக விற்பனை 25 வீதமாக குறைவடைந்துள்ளதாக சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறுகையில், கேக் தயாரிக்க உரிய நேரத்தில் எங்களுக்கு முட்டைகள் கிடைக்கவில்லை. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் பாதுகாப்பாக பெட்டிகளில் உள்ளன.
எனினும், சந்தையில் முட்டைகள் எதுவும் விநியோகிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.