காலி தடல்ல உடுவத்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலத்தை நேற்று (26) காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
62 வயதுடைய மஹதுரகேவத்த, தடல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் இடம்பெற்ற விதம் தொடர்பில் இதுவரையில் சரியான தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சடலத்தின் பிரேத பரிசோதனையின் பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மார்பு மற்றும் வயிற்றில் பலத்த காயங்கள் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.