வவுனியாவில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாடு பூராகவும் சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.
இந்த நிலையில் வவுனியாவில் இருக்கும் சதோச விற்பனை நிலையங்களுக்கு செல்லும் பலரும் அத்தியாவயசிப் பொருட்களை பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சீனி, பால்மா மற்றும் சில அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பருப்பு மற்றும் பொன்னி அரசி என்பனவே அங்கு அதிகமாக கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்