நாடுமுழுவதிலும் உள்ள சதோச விற்பனை நிலையங்களில் அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் அரிசி, பருப்பைக் கொள்வனவு செய்வதற்காக சதோச விற்பனை நிலையங்களுக்கு வந்த மக்கள் வெறுங்கையுடன் இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை சில சுப்பர் மார்க்கட்டுக்களில் பச்சை அரசி 145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறபோதிலும், ஒருவருக்கு மூன்று கிலோகிராம் மாத்திரம் என்கிற நிபந்தனையில் வழங்கப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்