நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது 14வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்..
அவர் இதுவரை 108 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுள்ளார்.
12 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இதேவேளை, தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்று முன்னர் வரை 5 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்களைப் பெற்றது.
தற்போது களத்தில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 108 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 25 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.