கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாரதூரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக பகீர் தகவலொன்று வெளியாகியுள்ளது.
மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான முறையில் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர் மற்றும் கிராம புறங்களில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளன.
இந்நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என எதிர்தரப்பின் சுயாதீன உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இன்று நாடாளுமன்றில் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.