சட்ட விரோதமாக அல்லது அசாதாரணமாக சொத்துக்கள் சேகரித்துள்ளமை தொடர்பான நியாயமான சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருக்குமாயின், அது தொர்பாக 1917 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலமும் செயல்படும். சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துக்களை சேகரிக்கின்றமை கண்கானிக்கப்பட்டமையினால், அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய தகவல்களை விசாரணை செய்வதற்காக சட்ட விரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணை என்ற பெயரில் புதிய பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையின் கீழ் செயற்படுகின்றுது.