சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி கனடாவுக்கு செல்லமுயன்ற இலங்கையர்கள் 306 பேர் படகு பழுதடைந்ததால் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து தமிழர் ஒருவர் உட்பட மூன்று அதிகாரிகள் , வியட்நாமில் இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமிக்குள் சென்ற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
வலுக்காட்டாயமாக அனுப்ப முயன்றால் தற்கொலை செய்வோம்
இந்நிலையில் இலங்கை அதிகாரிகளுடன் தமக்கு செல்லமுடியாது என்றும் , வலுக்காட்டாயமாக தம்மை அனுப்ப முயன்றால் தாம் தற்கொலை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் , அங்கு சிக்கியுள்ள இலங்கையர்கள் கூறிய காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு தம்மை முகவர்கள் ஏமாற்றிய நிலையில், முகாமிற்கு வந்த அதிகாரிகள் தம்மை மீள் நாட்டு வருமாறு வற்புறுத்துகின்றதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.