வாகன உதிரி பாகங்கள் என்ற போர்வையில் ஜப்பானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கொள்கலனில் இருந்து, பாகங்களாக பிரித்துக் கொண்டுவரப்பட்ட நான்கு ஜீப் ரக வண்டிகளும், கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த 5 வாகனங்கள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புடையது எனவும் இதன் இறுதி மதிப்பீட்டை பெற்று வருவதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த 5 கார்களும் இலங்கை சுங்கத்துக்கு வாகன உதிரிப்பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.