ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் காலப்பகுதியில் சந்தேகநபர் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் தெரியவராததால் அவரை பிணையில் செல்ல அனுமதிப்பதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சந்தேகநபரான சச்சித்ர சேனாநாயக்கவின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்து நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.