முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியையும் அறிவித்து அரசியலிலும் களம் இறங்கியுள்ளார். இவரது மனைவி சங்கீதா இலங்கை பின்புலத்தை கொண்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம் பெயர் தமிழராவார்.
இந்நிலையில் நடிகர் விஜய் பெற்றோர்களை ஒதுக்கிவிட்டார் என்றும் மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகிக்கொண்டு வருகிறது. இவ்வாரான நிலையில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தனது மகன் குறித்தும் மருமகள் குறித்தும் கூறுகையில்,
விஜய்யை நான் எங்கேயும் விட்டுக்கொடுத்ததில்லை. விஜய்க்கு என்னை தான் பிடிக்கும், ஆனால் இருவரும் பேசியது கிடையாது என கூறியுள்ளார். அதோடு மருமகள் சங்கீதா மற்றும் பேரப்பிள்ளைகள் பற்றி குறிப்பிடுகையில்,
பேரன் சஞ்சய் இயக்குனராக வெளிநாட்டிலும், பேத்தி திவ்யா சென்னையில் 12 ஆம் வகுப்பு படிக்கிறாள் என கூறியுள்ளார், விஜய் மகள் திவ்யா சினிமாவிற்கு வருவாரா என்று கேட்டபோது, அவங்களோட ஒவ்வொரு அசைவும் சங்கீதா கவனித்து கொள்கிறார்.
ஹோம் ஒர்க் செய்வது முதல் பள்ளிக்கு அழைத்து செல்வது வரை அவர் தான் எல்லாமாக இருந்து பார்த்து வருகிறார்.
எங்கள் வீட்டுக்கு வரும் போது, நான் எதாவது குழந்தைகளுக்கு கொடுத்தால் கூட, இருவரும் அம்மாவை பார்ப்பாங்க, அந்த அளவிற்கு ஒழுக்கமாக வளர்த்து வருகிறார் என்று மருமகளை பாராட்டி கூறியுள்ளார் விஜய் தந்தை எஸ் ஏ சி.
பேத்தி சினிமாவில் வருவது சங்கீதா கையில் தான் இருக்கிறது. பேரன், நடிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டு இயக்குவது தான் பிடித்திருக்கிறது என்று வந்துவிட்டானே, தன்னை போல் என்றும் அவர் கூறியுள்ளார்.