நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி-எல ஏழாவது மைலுக்கு அருகில் பாரிய மண் மேடு சரிந்து வீதியின் குறுக்கே சரிந்து வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்க சிரமப்படும் பரீட்சார்த்திகள் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பதுளையில் இருந்து பண்டாரவளைக்கு செல்வதற்கு சிரமப்படும் பரீட்சார்த்திகள் பதுளை மத்திய கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள வீதியின் பகுதி துப்புரவு செய்யப்படும் வரை மாற்று வீதிகளான பண்டாரவளை – எட்டம்பிட்டிய வீதி மற்றும் தெமோதர – ஸ்பிரிங்வேலி வீதியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளனர்.