மகளிருக்கான டபிள்யூபிஎல் போட்டிகள் நேற்று (மார்ச் 4) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
ஆடவருக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான டபிள்யூபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
அதன்படி, இந்த ஆண்டு டபிள்யூபிஎல் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டு ஒவ்வொரு அணியினரும் தங்களுக்கான வீராங்கனை ஏலத்தில் எடுத்தனர். இதனையடுத்து, டபிள்யூபிஎல் தொடங்கும் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 4) டபிள்யூபிஎல் போட்டிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்தத் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி மற்றும் கிரித்தி சனோன் பங்குபெறும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.
அதேபோல, ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தளிக்கும் விதமாக பிரபல பாடகர் ஏ.பி.தில்லான் அவர்களின் இசைக் கச்சேரியும் நடைபெறுகிறது.
டபிள்யூபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதுதின.
டபிள்யுபிஎல்லின் (மகளிா் ப்ரீமியா் லீக்) ஒரு பகுதியாக மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்.
மும்பை தலைவர் ஹா்மன் ப்ரீத் அபாரமாக ஆடி 65 ஓட்டங்களை பெற்றார்.