கோதுமை மாவை பதுக்குபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக மாவட்ட மட்டத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கம்பஹா உட்பட பல பகுதிகளில் கோதுமை மாவின் இருப்புக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி, கோதுமை மாவை மொத்த சந்தைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோதுமை மாவை பதுக்கி வைப்பவர்கள் தொடர்பான தகவல்களை 1977 என்ற ஹொட்லைன் மூலம் தெரிவிக்கலாம் என அதிகாரசபையின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.