மாஃபியாவை தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கோதுமை மாவின் விலையை மக்கள் தாங்கும் அளவிற்கு குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் சில்லறை விலை அதிகபட்சமாக 240 ரூபாவாக அதிகரித்துள்ளது என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மாவின் விலை
“ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ.193 ஆக இருந்தது நாட்டின் ஏழை, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் கோதுமை மா பிரதான உணவாக மாறியுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் வர்த்தக அமைச்சு இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கான விடயத்தில் தலையிட்டமைக்காக வர்த்தக அமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த திடீர் விலைவாசி உயர்வால் யாருக்கு தரகுக்கட்டணம் கிடைக்கும் என்ற சந்தேகம் உள்ளது , அப்பாவி மக்களுக்கு எரியும் பிரச்சினையாக இது உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்களிடம் இந்த மாஃபியாவை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இல்லை என்றால், பிரச்சினையில் தலையிட்டு, இறக்குமதி, இறக்கும் செலவு, மக்களுக்கு அரச சலுகைகள் என, அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.