பொதுமக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அலி சப்ரி புதனன்று CNN க்கு வழங்கிய செய்தியில் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் ,
முன்னாள் ஜனாதிபதியின் நாடு திரும்புவது பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு “இராஜதந்திர வழிகள் மூலம்” கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அவர் நாடு திரும்புவதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் இலங்கையின் குடிமகன், அவர் விரும்பியபடி நாட்டுக்கு வரலாம் எனவும் அலி சப்ரி கூறியுள்ளார்..