இலங்கையின் ஜனாதிபதி பதிவியில் இருந்து கோட்டபாய ராஜபக்ச விலகிய நிலையில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் வங்கிகளினூடாக பணம் அனுப்பும் நடவடிக்கைகயை ஆரம்பித்துள்ளதனால் நாட்டில் டொலர் வரத்து அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ”ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” என மக்கள் போராடினார்கள்.
அதேவேளை கோட்டாபய ஜனாதிபதி பதவியைவிட்டு விலகும் வரை வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் நாட்டிற்கு பணம் அனுப்ப மாட்டோம் என கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது கோட்டபாய பதவி விலகிய நிலையில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் வங்கிகளினூடாக பணம் அனுப்ப ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது இலங்கையில் டொலரின் கையிருப்பு அதிகரித்து வர ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.