கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய சர்வதேச பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு பிரித்தானியா நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் எட் டேவி(Ed Davey) இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.