கொலொன்னவயில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலொன்ன நெடோல பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோடீஸ்வர வர்த்தகர் நேற்று புதன்கிழமை (16) பணத்துடன் தனது வேனில் தெனியாய நகருக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சென்றவர் வீடு திரும்பாததால் கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி கொலொன்ன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனில்கந்த பொது மயானத்துக்கு அருகில் பணத்தை கொண்டு வருவதற்காக வர்த்தகர் சென்ற வேனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
காணாமல்போன வர்த்தகரை கண்டுபிடிப்பதற்காக கொலொன்ன பொலிஸ் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.