சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என எந்தவொரு சட்டமும் அல்லது வழிகாட்டுதலும் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளால் விதிக்கப்படாத எந்தவொரு முறையும் செல்லுபடியாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 நோய் தொடர்பில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக சுகாதார அமைச்சினால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இன்னமும் செல்லுபடியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.