இலங்கைக்கு மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை எதிர்வரும் சனிக்கிழமை அளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொண்ட சுமார் 490,000 பேருக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.