கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை மெனிங் சந்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து ஆயிரத்து 486 கிலோகிராம் நிறையுடைய பத்திரிகைகளே கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பழைய பத்திரிகைகளின் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
வெள்ளவத்தை மெனிங் பொதுச் சந்தையின் நான்காவது மாடியில் அவ் வர்த்தக நிலையம் நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.