மோட்டார் சைக்கிள் – கார் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் ஒருவர் நேற்று முன் தினம் (31) யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் புகையிரதநிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவைச் சேர்ந்த சந்திரபோஸ் சஜீகாந் (வயது 23) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் கடந்த 25ஆம் திகதி தனது வீட்டில் இருந்து நண்பரின் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார்.
இதன்போது குருமன்காடு பகுதியில் வீதியில் நிறுத்தி வைத்திருந்த காருடன் அவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 26ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்